அபாத்து நியூக்ளியசு பேரங்காடி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளதுஅபாத்து நியூக்ளியசு பேரங்காடி கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகமாகும். வளரும் புறநகர்ப் பகுதியான மரதுவில், திருப்புனித்துராவிற்கு அருகில் நகர மையத்திற்கு அருகில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொச்சியிலுள்ள பிரபலமான அபாத்து கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டு பேரங்காடி நிர்வகிக்கப்படுகிறது. 1.25 இலட்சம் மொத்த குத்தகை (சில்லறை) வருவாய் தரும் இடம் உட்பட மொத்தம் 2.3 லட்சம் சதுர அடியில் பேரங்காடி கட்டப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று 3 தளங்களில் பேரங்காடி திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமை அமைப்பு சான்றளிக்கப்பட்ட தங்கம் தரமதிப்பீடு செய்யப்பட்ட பேரங்காடி அபாத்து நியூக்ளியசு பேரங்காடியாகும். 2012 ஆம் ஆண்டிற்கான தென்னிந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிகத் திட்டப் பிரிவிலும் இப்பேரங்காடி விருது பெற்றது.




